TNPSC Thervupettagam

உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 01 – 07

August 6 , 2019 1881 days 803 0
  • உலக தாய்ப்பால் வாரமானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 01 முதல் 07 வரை அனுசரிக்கப்படுகிறது.
  • இது வாழ்வின் முதல் ஆறு மாதங்களுக்கு, மிகப்பெரிய அளவிலான ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ள தனித்துவமான  தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தாய்ப் பாலூட்டும் நடவடிக்கைக்கான உலகக் கூட்டிணைவு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் ஆகியோரால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • முதன்முதலில் 1992ல் அனுசரிக்கப்பட்ட இது தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த அனுசரிப்பின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியமானது, “பெற்றோரை மேம்படுத்துங்கள்,  தாய்ப்பால் கொடுங்கள்” எனும் கருத்துருவின் கீழ் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • தாய்ப் பாலூட்டுதல் முக்கியமானது ஏனெனில்
    • இது ஆரம்பக் கால வயிற்றுப் போக்கு மற்றும் கடுமையான சுவாச நோய் தொற்றுகள் போன்ற நோய்களைத் தடுப்பதினால் குழந்தை இறப்புகளை குறைக்கின்றது.
    • இது தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் போன்றவை  உருவாகும் ஆபத்தை குறைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்