TNPSC Thervupettagam

A வகை இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை

March 5 , 2024 136 days 214 0
  • வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ‘A வகை இரத்தம் உறையாமை நோய்க்கான மரபணு சிகிச்சையின் முதல் மனித மருத்துவப் பரிசோதனையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
  • A வகை இரத்தம் உறையாமை நோய் என்பது இரத்தம் இறுகுதல் அல்லது உறைதல் திறனை பாதிக்கும் நிலைகளின் குழுவாகும்.
  • ஒரு நபரின் உடலில் உள்ள இரத்தத்தில் உறைதல் காரணிகள் என்று அழைக்கப் படுகின்ற சில புரதங்கள் குறைவாக இருக்கும்போது இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
  • A வகை இரத்தம் உறையாமை நோய் மற்றும் B வகை இரத்தம் உறையாமை நோய் ஆகியவை இரத்தம் உறையாமை நோயின் இரண்டு முக்கிய வகைகள் ஆகும்.
  • இந்த இரண்டு வகை பாதிப்புகளிலும் சில ஒற்றுமைகள் உள்ளன, ஆனாலும் இரத்தம் உறைதல் என்ற பிரச்சனையை ஏற்படுத்தும் மரபணு மாறுபாட்டினைக் கொண்டு வேறுபடுத்தப் படுகின்றன.
  • A வகை இரத்தம் உறையாமை நோய்ப் பாதிப்புடன் வாழும் மக்களின் VIII இரத்தம் உறைதல் காரணியை உருவாக்குவதற்கு காரணமாக உள்ள F8 மரபணுவில் ஒரு மரபணு மாறுபாடு உள்ளது.
  • B வகை இரத்தம் உறையாமை நோய் பாதிப்பில், F9 மரபணுவில் ஒரு மரபணு மாறுபாடு உள்ளது என்பதனால் இதன் விளைவாக IX இரத்தம் உறைதல் காரணியின் உற்பத்தி குறைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்