TNPSC Thervupettagam

A.K. சிங் வாழ்நாள் சாதனையாளர் விருது

April 19 , 2019 1929 days 1186 0
  • மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 4-வது அப்துல் கலாம் புத்தாக்க மாநாட்டில் டாக்டர் A.K. சிங் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
  • டாக்டர் A.K. சிங் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (Defence Research and Development Organisation - DRDO) உயிர் அறிவியல் துறை இயக்குநராக இருக்கின்றார்.
  • இந்த அறிவியலாளர் 18-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைக் கொண்டிருக்கின்றார். மேலும் அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 57-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப் பதிப்புகளை வெளியிட்டு இருக்கின்றார்.
  • தொற்றுகின்ற காயத்தைக் கண்டறிவதற்காக அவர் டயக்னோபாக்ட் எனும் ஒரு கருவியை வடிவமைத்து இருக்கின்றார்.
  • மேலும் இவர் மருந்து ஆராய்ச்சித் துறையில் அணு மருத்துவப் புகைப்படத்தின் பயன்பாடான பார்மகோசின்டிகிராபி என்பதை உருவாக்கி வெளியிட்டும் இருக்கின்றார்.
  • இம்மாநாடு உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினத்தை அனுசரிப்பதற்காக அந்த பல்கலைக் கழகத்தால் அனுசரிக்கப்பட்டது.
உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம் – ஏப்ரல் 21
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2002 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21-ம் தேதியை உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
  • இத்தினம் தீர்வு காண்பதில் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் பங்கைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்திடவும் அதன் நீட்சியாக நீடித்த வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றிடவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் லியனார்டோ டா வின்சியின் பிறந்த தினத்திற்கு ஆறு நாட்கள் கழித்தும் சர்வதேசப் புவி அன்னை தினத்திற்கு ஒரு நாள் முன்பாகவும் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்