ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆந்திரப் பிரதேச சுகாதாரத் திருவிழாவின் ஒரு பகுதியாகP.மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சுற்றுலா திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் உலக வங்கியின் நிதியியல் உதவியுடன் ஆந்திரப் பிரதேச சுகாதார சிகிச்சை சேவை அமைப்பு வலுப்படுத்தப்படும்.
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது பொதுச் சுகாதார அமைப்பை மேம்படுத்தவும், மாநிலம் முழுவதும் குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேற்கொள்ளவும் மருத்துவ தொழிற்நுட்பத்தை அதன் பயன்பாட்டின் முழுஅளவிற்குப் பயன்படுத்துகின்றது.