சிங்கப்பூரின் ஆசியப் போட்டி நிறுவனமானது (Asia Competitiveness Institute’s-ACI) 2018 ஆம் ஆண்டுக்கான தொழில் தொடங்குவதற்கான குறியீட்டின் சமீபத்திய தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தரவரிசைக்கு உட்படுத்தப்பட்ட 21 மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
2016 ஆம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசமானது 2018-ல் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.