ஆண்ட்ரூ G. பார்டோ (மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம், ஆம்ஹெர்ஸ்ட்) மற்றும் ரிச்சர்ட் S. சட்டன் (ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம்) ஆகியோர் 2024 ஆம் ஆண்டு ACM A.M. டூரிங் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் நுட்பக் கற்றலில் (RL) அவர்களின் முன்னோடி மிக்க அரும்பெரும்பணிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
RL என்பது ஒரு சீரற்றச் சூழலில் நடவடிக்கைகளுக்கான வெகுமதிகளைப் பெறுவதன் மூலம் ஒரு முகவர் மிகவும் வெற்றிகரமாக நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.