டிஸ்லெக்ஸியா (வாசிப்புத் திறன் குறைபாடு) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரபதி பவனின் தெற்குக் கட்டிடம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை சிவப்பு நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டன.
இந்தக் கற்றல் குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாடு தழுவிய ‘Act4Dyslexia பிரச்சாரம்’ ஆனது மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 35 மில்லியன் மாணவர்கள் உட்பட இந்தியாவின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேரினை டிஸ்லெக்ஸியா நிலை பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.