TNPSC Thervupettagam

ADMM plus கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி - பன்னாட்டுப் பயிற்சி

May 3 , 2019 1939 days 585 0
  • இந்தியக் கடற்படையின் INS கொல்கத்தா மற்றும் INS சக்தி ஆகியவை ADMM plus (ஆசியான் மற்றும் இதர நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூடுகை - ASEAN Defence Ministers’ Meeting Plus) நாடுகளின் பன்னாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக புருனேயைச் சென்றடைந்துள்ளது.
  • மே மாதம் 1 முதல் 9 வரை நடைபெறும் இது கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியாகும்.
  • இந்த ADMM plus கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மீதான பயிற்சியானது (ADMM plus Ex MS & CT) ADMM Plus நாடுகள் குழுவின் பன்னாட்டுப் பயிற்சியாகும்.
  • இந்தப் பதிப்பானது புருனேவில் தொடங்கி சிங்கப்பூரில் முடிவடையும்.
  • இந்தப் பயிற்சியின் போது இந்தியக் கடற்படையானது பயிற்சியில் கலந்து கொள்ளும் பல்வேறு ஆசியான் மற்றும் அதன் பிற உறுப்பு நாடுகளின் கடற்படைகளுடன் துறைமுக மற்றும் கடற்பரப்புகளில் ஏற்படும் பல சிக்கலான நடவடிக்கைகள் பற்றிய நிபுணத்துவ கலந்துரையாடல்களில் ஈடுபடும்.
ADMM Plus
  • ADMM Plus ஆனது 10 நாடுகளைக் கொண்ட தளமாகும்.
  • இது ஆசியான் மற்றும் அதன் இதர கலந்துரையாடல் நாடுகளைக் கொண்டதாகும்.
  • குழு உறுப்பினர்களின் மத்தியில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்