நோய் தடுப்புத் திறனூட்டலைத் தொடர்ந்து ஏற்படும் பாதக விளைவுகளால் (Adverse Events Following Immunisation - AEFI) உண்டாகும் இறப்புகள் மீது மத்திய சுகாதார மேம்பாட்டு அமைச்சகமானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, நோய் தடுப்புத் திறனூட்டப்படும் ஒவ்வொரு ஒரு இலட்சம் குழந்தைகளுள், (இறப்பு மற்றும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேருதல் உட்பட) குறைந்தபட்சம் 10 தீவிர பாதக நிகழ்வுகளாவது உண்டாகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் AEFI தரவுகளானது மாவட்ட சுகாதார அலுவலர்களால் தொகுக்கப்படுகின்றது.
இத்தகு பாதக விளைவுகளை களைய, உலக சுகாதார நிறுவனமானது AEFI-ன் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு சுகாதார செயல்திறன் அளவுருக்களை (Health Performance Indicators) பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை வழங்கியுள்ளது.