இந்திய இராணுவத்திற்கும் 16 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ஆப்பிரிக்க இந்திய கூட்டு களப் பயிற்சி நடவடிக்கையானது மார்ச் 18 முதல் 27 வரையில் புனேவில் நடத்தப்படும்.
இப்பயிற்சி ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் மனிதாபிமான சுரங்க உதவி நடவடிக்கை மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கை ஆகியவற்றில் பங்கேற்கும் படைப் பிரிவுகளுக்கு யதார்த்த அடிப்படையிலான, விரிவான விவாதங்கள் மற்றும் தந்திர உபாய நடவடிக்கைகள் ஆகியவற்றில் பயிற்சியளிக்க உதவுகின்றது.
மேலும் இப்பயிற்சியானது இணைந்து செயலாற்றும் தன்மை, ஒருவர் மற்றவரது தொழில்நுட்பங்கள் மற்றும் தந்திர உபாயங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளல் ஆகியவற்றை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாட்டு மட்டத்திலான திட்டமிடுதல் மற்றும் தந்திர உபாய மட்டத்திலான பயிற்சி மூலம் அடைந்திடவும் கவனம் செலுத்துகின்றது.