TNPSC Thervupettagam

AFSPA சட்டத்தின் கீழ் ‘அமைதியற்றப் பகுதிகள்’ நிலை

April 2 , 2023 475 days 249 0
  • நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய சில மாநிலங்களில் 1958 ஆம் ஆண்டு ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (AFSPA) கீழ் அறிவிக்கப்பட்ட "அமைதி அற்றப் பகுதிகள்" என்ற அதிகார வரம்பினை ஏப்ரல் மாதத்திலிருந்துக் குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • கடந்த ஆறு மாதங்களாக, அசாமின் எட்டு மாவட்டங்கள் மற்றும் ஒரு துணைப் பிரிவு மற்றும் மணிப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் AFSPA சட்டம் அமலில் உள்ளது.
  • மணிப்பூரில் (இம்பால் நகராட்சிப் பகுதி தவிர) "அமைதியற்ற பகுதிகளுக்கான" அறிவிப்பானது 2004 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
  • AFSPA சட்டமானது முன்னதாக 1995 ஆம் ஆண்டு முதல் நாகாலாந்தின் ஒன்பது மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்த நிலையில் இது தற்போது 8 மாவட்டங்கள் என்ற அளவாக குறைக்கப் பட்டுள்ளது.
  • "அமைதியற்றப் பகுதிகளுக்கான" அறிவிப்பானது அசாம் மாநிலம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் இது ஒன்பது மாவட்டங்களுக்கும் மற்றொரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவுக்கும் மட்டும் என அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல், இது எட்டு மாவட்டங்களாக குறைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்