TNPSC Thervupettagam

AFSPA சட்ட நீட்டிப்பு

October 3 , 2023 467 days 319 0
  • மணிப்பூர் மாநில அரசாங்கமானது மாநிலம் முழுவதும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தினை (AFSPA) மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • ஆனால் இம்பால் பள்ளத்தாக்கில் அமைந்த ஏழு மாவட்டங்களில் உள்ள 19 காவல் நிலையங்களின் அதிகார வரம்பிற்கு இதில் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
  • பழங்குடியினச் சமூகங்கள் அதிகம் வாழும் அனைத்து மலை மாவட்டங்களிலும் இந்த சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட "பதட்டமான பகுதி" என்ற நிலை தொடரும்.
  • மாநில அரசானது தற்போது "ஒரு மாவட்டம், ஒரு படை" திட்டத்தின் கீழ், சிறப்பான நடவடிக்கைகளுக்காக வேண்டி பாதுகாப்புப் படைகளை நிலை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
  • 1972 ஆம் ஆண்டில் மாநில அந்தஸ்தைப் பெற்ற முன்னாள் ஒன்றியப் பிரதேசமான மணிப்பூரில் 1981 ஆம் ஆண்டு முதல் AFSPA அமலில் இருந்து வருகிறது.
  • AFSPA சட்டமானது, முந்தைய மணிப்பூர் ஒன்றியப் பிரதேசத்தில் நாகா மக்கள் அதிகம் காணப் படும் பகுதிகளிலும் 1958 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்