TNPSC Thervupettagam
July 17 , 2024 9 hrs 0 min 86 0
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது, 750 கோடி ஆரம்பத் தொகையுடன் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறத் தொழில் துறைகளுக்கான (Agri-SURE) வேளாண் நிதியை உருவாக்க உள்ளதாக அறிவித்தது.
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி மற்றும் வேளாண் அமைச்சகம் ஆகியவை தலா 250 கோடி ரூபாயும், பிற அமைப்புகள் மீதமுள்ள 250 கோடி ரூபாயையும் தனது பங்காக வழங்குகின்றன.
  • இந்த நிதியானது ஒவ்வொன்றிற்கும் 25 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுடன் சுமார் 85 வேளாண் சார் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிதியானது துறை சார்ந்த, குறிப்பிட்ட துறை சாராத மற்றும் கடன் மாற்று முதலீட்டு நிதிகள் (AIF) ஆகியவற்றில் முதலீடு செய்தல் மூலமாகவும், நேரடிச் சமபங்கு நிதி மூலமாகவும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும்.
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது AgriSURE கிரீனத்தான் 2024 என்ற நிகழ்வினையும் தொடங்கியுள்ளது.
  • இந்த ஹேக்கத்தான் நிகழ்வானது, மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களின் அதிகப் படியான விலை, வேளாண் கழிவுகளை இலாபகரமானப் பொருட்களாக மாற்றுதல் மற்றும் மீளுருவாக்கம் மிக்க வேளாண்மையினைப் பொருளாதார ரீதியில் இலாப கரமானதாக மாற்றுதல் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்