ஆப்பிரிக்க சுகாதாரச் செயல்பாட்டு நிரல் குறித்த சர்வதேச மாநாடு (AHAIC 2025) ஆனது சமீபத்தில் ருவாண்டா நாட்டின் கிகாலி நகரில் நடைபெற்றது.
நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கும் நன்கொடை நிதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காகவும் சுகாதார நிதியுதவியில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு அல்மா-அட்டா பிரகடனம் ஆனது, அனைவருக்குமான ஆரோக்கிய சேவையினை அடைவதற்கு வேண்டி ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு அவசியம் என்று அங்கீகரிப்பதுடன் உலகளாவிய பொது சுகாதாரத்தில் ஓர் அடையாளமாக உள்ளது.
இந்த அல்மா-அட்டா பிரகடனம் என்ற ஆனது, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பினை (PHC) பொது சுகாதாரக் காப்பீட்டின் (UHC) அடித்தளமாக ஆதரிக்கிறது.