இது இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) அலுவலகத்தின் தலைமையில், வெரிக்ஸ் மற்றும் INK உமேன் ஆகியவற்றின் ஒரு மிக முன்னோடி மிக்க முன்னெடுப்பாகும்.
இந்தச் சிறப்பு நோக்கம் சார்ந்த தளமானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலில் முன்னணியில் உள்ள நாட்டின் பெண்களைக் கொண்டாடச் செய்வதோடு, அவர்களை தரம் உயர்த்தி, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இளநிலை மட்டத்தில் GenAI பிரிவுப் பணிகளில் பெண்களின் பங்கு 33 சதவீதமாக மட்டுமே உள்ளது என்பதோடு உயர்நிலையில் இந்த எண்ணிக்கை 19 சதவீதமாகக் குறைகிறது.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) சந்தையானது, 2027 ஆம் ஆண்டிற்குள் 17 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது 2035 ஆம் ஆண்டிற்குள் தேசியப் பொருளாதாரத்திற்கு 1 டிரில்லியன் டாலர் வரை பங்களிக்கக் கூடும்.