TNPSC Thervupettagam

AIBA மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பின்ஷிப்

November 27 , 2018 2193 days 606 0
  • AIBA (International Boxing Association) மகளிர் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பு புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 48 கிலோப் பிரிவில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை வீழ்த்தி 6-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று C. மேரி கோம் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

  • இவருக்கு முன்னர் 5 முறை பட்டம் வென்றிருந்த அயர்லாந்து குத்துச் சண்டை வீரரான காட்டி டெய்லரின் சாதனையை மேரி முறியடித்துள்ளார்.
  • மேரி கோம் இதற்கு முன்னதாக 2002, 2005, 2006, 2008 மற்றும் 2010 ஆகிய வருடப் போட்டிகளில் பட்டம் வென்றார்.
  • 57 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் சோனியா சாஹல் ஜெர்மனியின் வாஹ்னர் ஓர்னெல்லா கேபிரில்லாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வயதான ஹரியானாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் தனது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • இந்தியா இந்தப் போட்டித் தொடரை 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக நடத்துகிறது. அப்போது 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்