AIBA (International Boxing Association) மகளிர் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பு புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 48 கிலோப் பிரிவில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை வீழ்த்தி 6-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று C. மேரி கோம் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இவருக்கு முன்னர் 5 முறை பட்டம் வென்றிருந்த அயர்லாந்து குத்துச் சண்டை வீரரான காட்டி டெய்லரின் சாதனையை மேரி முறியடித்துள்ளார்.
மேரி கோம் இதற்கு முன்னதாக 2002, 2005, 2006, 2008 மற்றும் 2010 ஆகிய வருடப் போட்டிகளில் பட்டம் வென்றார்.
57 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் சோனியா சாஹல் ஜெர்மனியின் வாஹ்னர் ஓர்னெல்லா கேபிரில்லாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வயதான ஹரியானாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் தனது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்தியா இந்தப் போட்டித் தொடரை 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக நடத்துகிறது. அப்போது 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.