TNPSC Thervupettagam

AIBD அமைப்பின் தலைமை

October 11 , 2023 283 days 235 0
  • ஆசிய-பசிபிக் ஒளிப்பரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (AIBD) பொது மாநாட்டின் (GC) தலைமைப் பொறுப்பிற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக வேண்டி இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • AIBD அமைப்பின் வரலாற்றில் இவ்வாறு ஒரு நாடு தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறையாகும்.
  • AIBD அமைப்பானது யுனெஸ்கோ அமைப்பின் கீழ் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்பில் தற்போது 44 நாடுகளைச் சேர்ந்த 92 உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • ஆசியா, பசிபிக், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள 28 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 48 ஒளிபரப்பு ஆணையங்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் 44 துணை நிறுவனங்களை உள்ளடக்கிய 26 அரசாங்க உறுப்பினர்கள் (நாடுகள்/அமைப்புகள்) இதில் அடங்கும்.
  • AIBD அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று ஆகும்.
  • இந்தியாவின் பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, இந்த அமைப்பிற்கான இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒரு பிரதிநிதி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்