ஆசிய-பசிபிக் ஒளிப்பரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (AIBD) பொது மாநாட்டின் (GC) தலைமைப் பொறுப்பிற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக வேண்டி இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
AIBD அமைப்பின் வரலாற்றில் இவ்வாறு ஒரு நாடு தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறையாகும்.
AIBD அமைப்பானது யுனெஸ்கோ அமைப்பின் கீழ் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த அமைப்பில் தற்போது 44 நாடுகளைச் சேர்ந்த 92 உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
ஆசியா, பசிபிக், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள 28 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 48 ஒளிபரப்பு ஆணையங்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் 44 துணை நிறுவனங்களை உள்ளடக்கிய 26 அரசாங்க உறுப்பினர்கள் (நாடுகள்/அமைப்புகள்) இதில் அடங்கும்.
AIBD அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று ஆகும்.
இந்தியாவின் பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, இந்த அமைப்பிற்கான இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒரு பிரதிநிதி அமைப்பாகும்.