ஒலிபரப்புதல் வளர்ச்சிக்கான ஆசியா-பசிபிக் நிறுவனம் அனைத்து இந்திய வானொலியின் பொது இயக்குநர் பயஸ் ஷெஹர்யாரை அந்நிறுவனத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது (AIBD – Asia-Pacific Institute Broadcasting Development).
AIBD-ன் தலைவர் பதவிக்கு முதன் முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைவர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
AIBD
யுனெஸ்கோவின் ஆதரவோடு 1977-ஆம் ஆண்டு AIBD உருவாக்கப்பட்டது.
இதன் முதல் மாநாட்டை மலேசியா நடத்தியது. இதன் தலைமையிடம் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.
இது மின்னணு ஊடகங்கள் வளர்ச்சித் துறையில் ஆசியா மற்றும் பசிபிக்கின் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உள்ள நாடுகளுக்கு சேவையளிக்கும், பிராந்திய அரசுகளுக்கிடையேயான நிறுவனமாகும் (UN-ESCAP – United Nations Economic and Social Commission for Asia and Pacific).
கொழும்புவில் நடைபெற்ற 44-வது வருடாந்திர மாநாட்டின் போது AIBD இன் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.