TNPSC Thervupettagam

AIIB -ன் 4வது வருடாந்திர சந்திப்பு

July 1 , 2018 2243 days 629 0
  • ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB - Asian Infrastructure Investment Bank) 4வது வருடாந்திர சந்திப்பு ஆசியாவிற்கு வெளியில் முதன்முதலாக லக்ஸம்பர்க்கில் ஜூலை 2019-ல் நடைபெற உள்ளது.
  • லக்ஸம்பர்க் AIIB-ன் ஸ்தாபன உறுப்பினர் ஆகும். அதுமட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையேயான முன்னணி நிதி நிறுவனம் மற்றும் முதலீட்டு அனுசரணையாளர் ஆகும்.
  • AIIB குழுவின் முதல் சந்திப்பு 2016-ம் ஆண்டு பெய்ஜிங்-ல் நடைபெற்றது. அதன் பிறகு தென் கொரியாவில் உள்ள ஜெஜூ – ல் 2017-ம் ஆண்டு நடைபெற்றது மற்றும் சமீபத்தில் மும்பையில் இரண்டு நாள் சந்திப்பாக நடைபெற்றது.
  • பலதரப்பு மேம்பாட்டு வங்கியான AIIB, பெய்ஜிங்கை தலையிடமாகக் கொண்டுள்ளது. ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளில் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளில் முன்னேற்றம் காண்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்