ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB - Asian Infrastructure Investment Bank) நிர்வாகிகள் குழுவின் 3-வது வருடாந்திர சந்திப்பை இந்தியா மும்பையில் நடத்த உள்ளது.
2018-ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்த வருடாந்திர சந்திப்பின் கருத்துரு “உள்கட்டமைப்புக்கு நிதி திரட்டுதல், புத்தாக்கம் மற்றும் கூட்டிணைவு “.
இச்சந்திப்பை இந்தியாவில் நடத்துவதற்காக இந்தியாவும் AIIB-யும் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
AIIB
ஆசியா முழுவதும் போதிய ஊக்கம் இன்றி தேங்கி இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்வதற்காக வேண்டி உலக நாடுகளை ஒருங்கிணைப்பதற்காக நிறுவப்பட்டஓர் புதிய பல்தரப்பு நிதியியல் நிறுவனமே AIIB ஆகும்.
52 உறுப்பு நாடுகளைக் கொண்ட இதன் தலைமையகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ளது.
சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியவை AIIB-ன் மூன்று பெரும் பங்குதாரர்கள் ஆவர்.
மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இவற்றின் உறுப்பினர்கள் அல்ல.
இலண்டன் இண்டர்பேங்க் கடன் விகிதத்தோடு (LIBOR-London Inter Bank Offered Rate) கூடுதலாக 1.5 சதவீத வட்டி விகிதத்தினைக் கொண்டு 25 ஆண்டுகால திருப்பி செலுத்தும் கால வரம்போடு, கூடுதலாக 5 ஆண்டு கால கூடுதல் அவகாசத்தோடு (grace period) AIIB வங்கியானது sovereign மற்றும் non-sovereign நிதியுதவியை உறுப்பு நாடுகளின் பல்வேறு துறைகளுக்கு வழங்கும்.