TNPSC Thervupettagam

AIMC அமைப்பு

February 25 , 2025 8 days 66 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) ஆனது, தானியங்கி மற்றும் நுண்ணறிவு சார் இயந்திர உதவியுடன் கூடிய கட்டுமான (AIMC) அமைப்பின் பயன்பாட்டைத் துரிதப்படுத்தியுள்ளது.
  • இது சாலை அமைக்கும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுமானத்துடன் சேர்த்து ஆய்வும் மேற்கொள்ளப்படுவதால், ஒவ்வொரு சாலையமைப்புத் திட்டத்தின் நிலை குறித்த நிகழ்நேரத் தரவை வழங்கும்.
  • இவ்வாறு உருவாக்கப்பட்ட தரவு ஆனது, பங்குதாரர்களுக்கு நிகழ்நேர அடிப்படையில் அனுப்பப்படும்.
  • கட்டுமானத்தில் உள்ள 63 கி.மீ நீள லக்னோ-கான்பூர் விரைவுச் சாலைத் திட்டத்தில், NHAI ஆனது, AIMC அமைப்பினை ஒரு சோதனை முயற்சியாக செயல்படுத்தி வருகிறது.
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 1.46 லட்சம் கி.மீ. நீள சாலைக் கட்டமைப்பு உள்ளது.
  • இந்த வலையமைப்பில், சுமார் 3,000 கி.மீ. ஆனது மிகவும் அதிவேக வழித்தடங்களைக் கொண்டுள்ளது.
  • 2047 ஆம் ஆண்டு வரையில் மேலும் 45,000 கி.மீ. நீள சாலைகளை அமைப்பதற்கான ஒரு தொலைநோக்குத் திட்டத்தினை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்