கல்வி அமைச்சகம் ஆனது, 2021-2022 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பை (AISHE) வெளியிட்டுள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் 1.57 கோடியாக இருந்த உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.
இது 50 லட்சம் மாணவர்களின் அதிகரிப்பு (32 சதவீதம்) ஆகும்.
2014-15 ஆம் ஆண்டில் 46.07 லட்சமாக இருந்த பட்டியலின மாணவர்கள் சேர்க்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 66.23 லட்சமாக இருந்தது (44 சதவீதம் அதிகரிப்பு).
2020-21 ஆம் ஆண்டில் 4.14 கோடியாக இருந்த உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 4.33 கோடியாக அதிகரித்துள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் 3.42 கோடியாக (26.5 சதவீதம்) இருந்த மாணவர் சேர்க்கையானது, சுமார் 91 லட்சம் அதிகரித்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் 29.01 லட்சமாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 21.02 லட்சமாகவும் இருந்த பட்டியலின சாதியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவிகளின் சேர்க்கையானது, 2021-22 ஆம் ஆண்டில் 31.71 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது 2014-15 ஆம் ஆண்டில் இருந்து 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் 16.41 லட்சமாக இருந்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ஆனது, 2021-22 ஆம் ஆண்டில் 27.1 லட்சமாக அதிகரித்துள்ளது (65.2 சதவீதம் அதிகரிப்பு).
2014-15 ஆம் ஆண்டில் 1.13 கோடியாக இருந்த இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 1.63 கோடியாக அதிகரித்துள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் 50.8 லட்சம் ஆக இருந்த இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர் சேர்க்கையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
மொத்த மாணவர்களில் சுமார் 78.9 சதவீதம் பேர் இளங்கலை நிலைப் படிப்புகளிலும், 12.1 சதவீதம் பேர் முதுகலை நிலைப் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர்.
மொத்தப் பல்கலைக்கழகங்களில் 58.6 சதவீதப் பங்கினைக் கொண்ட அரசுப் பல்கலைக் கழகங்கள், மொத்த சேர்க்கையில் 73.7 சதவீதப் பங்கினையும், மேலும் தனியார் பல்கலைக் கழகங்கள் 26.3 சதவீதப் பங்கினையும் கொண்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பல்கலைக்கழக அளவிலான கல்வி நிறுவனங்கள் 1,168, கல்லூரிகள் 45,473 மற்றும் எந்தவொரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படாத நிறுவனங்கள் 12,002 ஆகும்.