TNPSC Thervupettagam

AISHE கணக்கெடுப்பு 2020-21

June 2 , 2023 417 days 225 0
  • கல்வி அமைச்சகத்தின் கீழ் AISHE கணக்கெடுப்பு 2020-21 ஆனது நடத்தப்பட்டது.
  • உயர்கல்வியில் பட்டியலிடப்பட்ட சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோரின் சேர்க்கை முறையே 4.2%, 11.9% மற்றும் 4% ஆக அதிகரித்துள்ளது.
  • இதன்படி முஸ்லீம் சமூகத்தின் சேர்க்கை 8% குறைந்துள்ளது.
  • உத்தரப் பிரதேசம் (36%), ஜம்மு காஷ்மீர் (26%), மகாராஷ்டிரம் (8.5%) மற்றும் தமிழ்நாடு (8.1%) ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையான சரிவு பதிவாகியுள்ளது.
  • 43% முஸ்லீம் சமூகத்தினர் உயர்கல்வியில் பதிவு செய்துள்ள ஒரே மாநிலம் கேரளா ஆகும்.
  • நாட்டில் உயர்கல்வியில் பதிவு செய்துள்ள மொத்த மாணவர்களில் 36% மாணவர்கள் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் ஆவர்.
  • இதில் 14 சதவீதத்தினர் பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆவர்.
  • இந்த இரு சமூகங்களும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 50% இடங்களை ஒதுக்கீடாகப் பெறுகின்றன.
  • 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள முஸ்லீம் சமூகத்தினரின் உயர்கல்வி சேர்க்கை 4.6% ஆக மட்டுமே பதிவாகியுள்ளது.
  • அகில இந்திய அளவில் மொத்த ஆசிரியர்களில் 56 சதவீதத்தினர் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆவர்.
  • இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையே 32%, 9% மற்றும் 2.5% ஆக உள்ளது.
  • ஒட்டு மொத்த ஆசிரியர்களில் முஸ்லீம்கள் 5.6% மட்டுமே உள்ளனர்.
  • பாலின அடிப்படையில் 100 ஆண் ஆசிரியர்களுக்கு 75 பெண் ஆசிரியர்கள் என்ற வீதமே உள்ளது.
  • 71% பெண் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்த ஆசிரியர்களும் 75% பெண் பட்டியலிடப் பட்ட சாதியினர் வகுப்பினரைச் சேர்ந்த ஆசிரியர்களும் உள்ளனர், ஆனால் 100 ஆண் முஸ்லீம் ஆசிரியர்களுக்கு 59 பெண் முஸ்லீம் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்