TNPSC Thervupettagam

AISHE கணக்கெடுப்பு 2021-2022

January 28 , 2024 174 days 194 0
  • கல்வி அமைச்சகம் ஆனது, 2021-2022 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பை (AISHE) வெளியிட்டுள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 1.57 கோடியாக இருந்த உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.
  • இது 50 லட்சம் மாணவர்களின் அதிகரிப்பு (32 சதவீதம்) ஆகும்.
  • 2014-15 ஆம் ஆண்டில் 46.07 லட்சமாக இருந்த பட்டியலின மாணவர்கள் சேர்க்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 66.23 லட்சமாக இருந்தது (44 சதவீதம் அதிகரிப்பு).
  • 2020-21 ஆம் ஆண்டில் 4.14 கோடியாக இருந்த உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 4.33 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 3.42 கோடியாக (26.5 சதவீதம்) இருந்த மாணவர் சேர்க்கையானது, சுமார் 91 லட்சம் அதிகரித்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 29.01 லட்சமாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 21.02 லட்சமாகவும் இருந்த பட்டியலின சாதியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவிகளின் சேர்க்கையானது, 2021-22 ஆம் ஆண்டில் 31.71 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • இது 2014-15 ஆம் ஆண்டில் இருந்து 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 16.41 லட்சமாக இருந்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ஆனது, 2021-22 ஆம் ஆண்டில் 27.1 லட்சமாக அதிகரித்துள்ளது (65.2 சதவீதம் அதிகரிப்பு).
  • 2014-15 ஆம் ஆண்டில் 1.13 கோடியாக இருந்த இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 1.63 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 50.8 லட்சம் ஆக இருந்த இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர் சேர்க்கையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
  • மொத்த மாணவர்களில் சுமார் 78.9 சதவீதம் பேர் இளங்கலை நிலைப் படிப்புகளிலும், 12.1 சதவீதம் பேர் முதுகலை நிலைப் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர்.
  • மொத்தப் பல்கலைக்கழகங்களில் 58.6 சதவீதப் பங்கினைக் கொண்ட அரசுப் பல்கலைக் கழகங்கள், மொத்த சேர்க்கையில் 73.7 சதவீதப் பங்கினையும், மேலும் தனியார் பல்கலைக் கழகங்கள் 26.3 சதவீதப் பங்கினையும் கொண்டுள்ளன.
  • பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பல்கலைக்கழக அளவிலான கல்வி நிறுவனங்கள் 1,168, கல்லூரிகள் 45,473 மற்றும் எந்தவொரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படாத நிறுவனங்கள் 12,002 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்