நீட் தேர்வு குறித்து மக்களின் கருத்து பற்றிய தமது அறிக்கையினை A.K. ராஜன் குழு சமர்ப்பித்துள்ளது.
பெரும்பாலான மக்கள் நீட் தேர்விற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாக நீதிபதி ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
2016 ஆம் ஆண்டில் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வானது 2018 ஆம் ஆண்டு வரை நடைமுறைப் படுத்தப் பட வில்லை, ஆனால் அதன் பிறகு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டது.
கடந்த ஆண்டில் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டினை மாநில அரசு அறிமுகப் படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 300 மாணவர்கள் பயனடைந்தனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 12 அன்று நீட் தேர்வினை நடத்த மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.