இந்திய ராணுவமானது ரஷ்யாவுடன் AK - 203 வகை தாக்குதல் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இந்திய ராணுவமானது AK - 203 துப்பாக்கிகள் தவிர, சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து SIG - 716 வகை தாக்குதல் துப்பாக்கிகளின் முதல் தொகுப்பை 10,000 என்ற எண்ணிக்கையில் பெற்றுள்ளது.
தற்போது இந்திய ராணுவமானது உள்நாட்டு INSAS (Indian National Small Arms System - இந்திய தேசிய சிறிய ஆயுத அமைப்பு) ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றது.
INSAS என்பது ஒரு இலகு ரக இயந்திரத் துப்பாக்கியாகும். இது தற்போது பீரங்கி தொழிற்சாலை - திருச்சி, இஷாபூர் படைக்கலச் சாலை மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப் படுகின்றது.