TNPSC Thervupettagam
September 27 , 2021 1062 days 864 0
  • நீட் தேர்வின் தாக்கம் குறித்து 165 பக்கங்கள் கொண்ட  ஒரு அறிக்கையானது ஓய்வு பெற்ற நீதிபதி A.K. ராஜன் தலைமையிலான குழுவினால் சமர்ப்பிக்கப் பட்டது.
  • நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் நியமனத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்துவதால் நீட் தேர்வானது தமிழக சுகாதார உள்கட்டமைப்பைப் பாதிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • கிராமப்புற மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெற இயலாமல் போகலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • நீட் தேர்விற்கு முன்னதாக தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 14.44 சதவீதமாக வழங்கப்பட்ட MBBS  சேர்க்கை வீதமானது 2020-21 ஆம் ஆண்டில் 1.7 சதவீதமாக குறைந்து விட்டது எனவும் இந்தக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்