WB89-789 என்ற பகுதியில் புதிதாக தோன்றிய நட்சத்திரம் மற்றும் சிக்கலான கரிமப் பொருளினைச் சுற்றியுள்ள ஒரு குழுமத்தினை அறிவியலாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
இது சேய்மையில் உள்ள வெளிப்புற அண்டத்தில் அமைந்துள்ளது.
சிலியில் உள்ள அட்டகாமா லார்ஜ் மில்லி மீட்டர்/சப் மில்லி மீட்டர் அரே (ALMA- Atacama Large Milli meter/submilli meter Array) என்ற நோக்குக் கூடத்தினைப் பயன்படுத்தி இது மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பானது பிரபஞ்சத்தின் மறைக்கப்பட்ட வேதியியல் சார்ந்த சில தகவல்களை வெளிப்படுத்தியது.
மெத்தனால் (CH3OH), மீத்தில் ஃபார்மேட் (HCOOCH3), எத்தனால் (C2H5OH), டைமீத்தில் ஈதர் (CH3OCH3), ப்ரோபனேனிட்ரைல் (C2H5CN), ஃபார்மைடு (NH2CHO) போன்ற பல வகையான சிக்கலான கரிம மூலக்கூறுகள் அண்டத்தின் ஆதிச் சூழலில் உள்ளன.