TNPSC Thervupettagam
January 17 , 2022 952 days 437 0
  • WB89-789 என்ற பகுதியில் புதிதாக தோன்றிய நட்சத்திரம் மற்றும் சிக்கலான கரிமப் பொருளினைச் சுற்றியுள்ள ஒரு குழுமத்தினை அறிவியலாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
  • இது சேய்மையில் உள்ள வெளிப்புற அண்டத்தில் அமைந்துள்ளது.
  • சிலியில் உள்ள அட்டகாமா லார்ஜ் மில்லி மீட்டர்/சப் மில்லி மீட்டர் அரே (ALMA- Atacama Large Milli meter/submilli meter Array) என்ற நோக்குக் கூடத்தினைப் பயன்படுத்தி இது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது பிரபஞ்சத்தின் மறைக்கப்பட்ட  வேதியியல் சார்ந்த சில தகவல்களை வெளிப்படுத்தியது.
  • மெத்தனால் (CH3OH), மீத்தில் ஃபார்மேட் (HCOOCH3), எத்தனால் (C2H5OH), டைமீத்தில் ஈதர் (CH3OCH3), ப்ரோபனேனிட்ரைல் (C2H5CN), ஃபார்மைடு (NH2CHO) போன்ற பல வகையான சிக்கலான கரிம மூலக்கூறுகள் அண்டத்தின் ஆதிச் சூழலில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்