TNPSC Thervupettagam
June 3 , 2021 1181 days 623 0
  • ரோப்பரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (IIT-Ropar) ‘AmbiTAG’ எனும் கருவியை உருவாக்கியுள்ளது.
  • இது “Cold Chain” எனப்படும் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட  ஒரு அமைப்பிற்காக வேண்டி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வெப்பநிலை தரவுப் பதிவு அமைப்பாகும்.
  • இது USB வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது தனது சுற்றுப்புறப் பகுதியின் வெப்பநிலையைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கும்.
  • ஒரு முறை மின்னேற்றப் பட்டால் எந்த நேர மண்டலத்திலும் –40°  முதல் +80° வரையிலான வெப்பநிலையைக் கண்டறியும் வகையில் 90 நாட்கள் வரையில்  இது தொடர்ந்து இயங்கக் கூடியதாகும்.
  • உலகின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் குறிப்பிட்டப் பொருளானது இன்னும் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதா அல்லது வெப்பநிலை மாறுபாட்டினால் சிதைந்து விட்டதா எனக் கண்டறிவதற்கு இந்த உபகரணம் உதவியாக இருக்கும்.
  • கோவிட்-19 தடுப்பு மருந்துகள் போன்ற பிற தடுப்பு மருந்துகள், உடல் உறுப்புகள் மற்றும் சிகிச்சைக்கான இரத்தம் போன்றவற்றை வேறிடத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த தகவலானது முக்கியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்