TNPSC Thervupettagam
December 16 , 2023 346 days 248 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் உலோக அயனிகளை அகற்றுவதற்காக வேண்டி ‘AMRIT’ என்ற ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
  • AMRIT’ என்பது இந்தியத் தொழில்நுட்பம் மூலம் ஆர்சனிக் மற்றும் உலோகத்தை அகற்றுதல்  என்பதைக் குறிக்கிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் அதன் வழியாக தண்ணீர் செலுத்தப்படும் போது ஆர்சனிக்கை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்கச் செய்கின்ற, நுண்ணிய அளவிலான இரும்பு ஆக்சி-ஹைட்ராக்சைடைப் பயன்படுத்துகிறது.
  • இந்த நீர்ச் சுத்திகரிப்புக் கருவியானது, வீட்டு உபயோகம் மற்றும் அனைத்து சமூகப் பயன்பாடுகளுக்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஆர்சனிக் என்பது பூமியின் கண்ட மேலோட்டின் மீது இயற்கையாகக் காணப்படும் மூலக்கூறு ஆகும் என்பதோடு இது காற்று, நீர் மற்றும் நிலம் என்று அனைத்திலும் சுற்றுச்சூழலில் பரவிக் காணப்படுகிறது.
  • இது அதன் கனிம வடிவத்தில் அதிக நச்சுத் தன்மை கொண்டது.
  • குடிநீர் மற்றும் உணவு மூலமாக ஆர்சனிக் உடலில் உட்புகுவதால் புற்றுநோய் மற்றும் தோல் புண்கள் ஏற்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்