கேரள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் AMRITH நடவடிக்கையின் கீழான சோதனைகளைத் தொடங்கி உள்ளது.
AMRITH என்பது முழு ஆரோக்கியத்திற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் எதிர்ப்பாற்றல் தடுப்பு நடவடிக்கை என்பதைக் குறிக்கிறது.
இது மாநிலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருந்து சீட்டின்றி செய்யப்படும் (OTC) விற்பனையைத் தடுப்பதன் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கையை அத்துறை மேற்கொண்டு வருகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் OTC விற்பனையைக் கண்டறிவதற்காக சில்லறை மருந்து விற்பனை கடைகளில் திடீர் சோதனைகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு AMRITH நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் மருந்து விற்பனைக் கடைகளுக்கு எதிராக புகார் தெரிவிக்க 18004253182 என்ற இலவச எண் (டோல் ஃப்ரீ எண்) அறிவிக்கப்பட்டுள்ளது.