இந்தத் திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
இந்திய அரசானது அதன் முதன்மைத் திட்டமான AMRUT (புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டம்) திட்டத்திற்கான காலக்கெடுவை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 2022 ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது.
AMRUT திட்டம் பற்றி
இந்தத் திட்டமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நகர்ப்புறங்களைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் பிரதமர் மோடியால் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டத்திற்கு முன்பு ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புதுப்பித்தல் என்ற திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
நீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மை போன்ற முக்கியமான பகுதிகளில் இந்தத் திட்டமானது கவனம் செலுத்த இருக்கின்றது.
இந்தத் திட்டமானது அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து சிறு நகரங்களையும் பெரு நகரங்களையும் உள்ளடக்கிய 500 நகரங்களை உள்ளடக்கியுள்ளது.