சிறுபான்மை சமூகத்தினால் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் ஆனது சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப் பட்டவுடன் அதனது அடையாளத்தை இழக்காது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.
1967 ஆம் ஆண்டில் S. அஜீஸ் பாஷா மற்றும் இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடுத்தனர்.
AMU (அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்) ஒரு மத்திய பல்கலைக்கழகம் என்றும், அதனைச் சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது என்றும் அந்த அமர்வு கூறி இருந்தது.
மத சிறுபான்மையினரால் நிறுவப்படாத கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்றும், அரசியலமைப்பின் 30(1)வது சரத்தின் கீழ் அவர்கள் அதற்கான பாதுகாப்பைக் கோர முடியாது என்றும் அது கூறியது.
சரத்து 30(1) ஆனது மத மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் தங்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதற்கான உரிமையை நிலைநிறுத்துகிறது.
1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட AMU பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து ஆனது, 1981 ஆம் ஆண்டு AMU (திருத்தம்) என்ற சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தால் மீண்டும் வழங்கப்பட்டது.