இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் நிறுவப்பட்ட அணுசக்தித் தொழில்நுட்பம் சார்ந்த அமெரிக்க நிறுவனத்தினால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆனது, ஒரு குறிப்பிட்ட அளவிலான செறிவூட்டல் கொண்ட தோரியம் மற்றும் யுரேனியம் ஆகியவற்றின் கலவையான எரிபொருளை உருவாக்கியுள்ளது. இது HALEU (உயர் மதிப்பீடு குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம்) என்று அழைக்கப் படுகிறது.
கிளீன் கோர் நிறுவனம் ஆனது இந்தக் கலவையை ANEEL (செறிவூட்டப்பட்ட செயல்பாட்டுக் காலத்திற்கான மேம்பட்ட அணுசக்தி) என்று அழைக்கிறது.
ANEEL எரிபொருளை தற்போதுள்ள அழுத்த கனநீர் உலைகளில் (PHWRs) பயன்படுத்தலாம்.
PHWR என்பது இந்தியாவின் அணுசக்தி நிலையங்களின் ஆற்றல் உற்பத்தி அலகாக இருக்கும் உள்நாட்டு அணு உலை அமைப்பாகும்.
இந்தியாவில் மொத்தம் 4,460 மெகாவாட் திறன் கொண்ட 18 PHWR அணுஉலைகள் உள்ள நிலையில் இந்தியா 700 மெகாவாட் திறன் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட உலைகளை உருவாக்கி வருகிறது.
தற்போதுள்ள அணு உலைகளில் பெரும்பாலானவை 5 சதவீத அளவிலான யுரேனியம்-235 கொண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளில் இயங்குகின்றன.
HALEU என்பது 5 சதவீதத்திற்கும் அதிகமாக ஆனால் 20 சதவீதத்திற்கும் குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும்.
தற்போது ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே HALEU உற்பத்தி செய்வதற்கான உள் கட்டமைப்பு உள்ளது.
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய அளவிலான தோரியம் இருப்பு உள்ள நிலையில் இது 1.07 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த இருப்பானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும்.
இந்திய நாடானது, இந்த தோரிய இருப்பினைப் பயன்படுத்தினால், அது போதுமான பசுமை ஆற்றலை உற்பத்தி செய்து, அதன் இலக்கு ஆண்டான 2070 ஆம் ஆண்டிற்குள் எளிதாக நிகர சுழி நிலையை எட்டும்.
எனினும், தோரியம் ஒரு திடமான பொருள் மற்றும் ஒரு பிளவிற்கு உட்படும் பொருள் அல்ல.
அதாவது, அணு உலையில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு யுரேனியம்-235 அல்லது புளூட்டோனியம்-239 உடன் சேர்த்து அதனைப் பயன்படுத்த வேண்டும்.