TNPSC Thervupettagam
January 13 , 2024 189 days 302 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் நிறுவப்பட்ட அணுசக்தித் தொழில்நுட்பம் சார்ந்த அமெரிக்க நிறுவனத்தினால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிறுவனம் ஆனது, ஒரு குறிப்பிட்ட அளவிலான செறிவூட்டல் கொண்ட தோரியம் மற்றும் யுரேனியம் ஆகியவற்றின் கலவையான எரிபொருளை உருவாக்கியுள்ளது. இது HALEU (உயர் மதிப்பீடு குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம்) என்று அழைக்கப் படுகிறது.
  • கிளீன் கோர் நிறுவனம் ஆனது இந்தக் கலவையை ANEEL (செறிவூட்டப்பட்ட செயல்பாட்டுக் காலத்திற்கான மேம்பட்ட அணுசக்தி) என்று அழைக்கிறது.
  • ANEEL எரிபொருளை தற்போதுள்ள அழுத்த கனநீர் உலைகளில் (PHWRs) பயன்படுத்தலாம்.
  • PHWR என்பது இந்தியாவின் அணுசக்தி நிலையங்களின் ஆற்றல் உற்பத்தி அலகாக இருக்கும் உள்நாட்டு அணு உலை அமைப்பாகும்.
  • இந்தியாவில் மொத்தம் 4,460 மெகாவாட் திறன் கொண்ட 18 PHWR அணுஉலைகள் உள்ள நிலையில் இந்தியா 700 மெகாவாட் திறன் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட உலைகளை உருவாக்கி வருகிறது.
  • தற்போதுள்ள அணு உலைகளில் பெரும்பாலானவை 5 சதவீத அளவிலான யுரேனியம்-235 கொண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளில் இயங்குகின்றன.
  • HALEU என்பது 5 சதவீதத்திற்கும் அதிகமாக ஆனால் 20 சதவீதத்திற்கும் குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும்.
  • தற்போது ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே HALEU உற்பத்தி செய்வதற்கான உள் கட்டமைப்பு உள்ளது.
  • இந்தியாவில் உலகின் மிகப்பெரிய அளவிலான தோரியம் இருப்பு உள்ள நிலையில் இது 1.07 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த இருப்பானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும்.
  • இந்திய நாடானது, இந்த தோரிய இருப்பினைப் பயன்படுத்தினால், அது போதுமான பசுமை ஆற்றலை உற்பத்தி செய்து, அதன் இலக்கு ஆண்டான 2070 ஆம் ஆண்டிற்குள் எளிதாக நிகர சுழி நிலையை எட்டும்.
  • எனினும், தோரியம் ஒரு திடமான பொருள் மற்றும் ஒரு பிளவிற்கு உட்படும் பொருள் அல்ல.
  • அதாவது, அணு உலையில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு யுரேனியம்-235 அல்லது புளூட்டோனியம்-239 உடன் சேர்த்து அதனைப் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்