தற்போதைக்குச் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க வசூல் அமைப்பினைத் தொடங்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், புதிய ANPR-FASTag அடிப்படையிலான தடையற்றச் சுங்க வசூல் அமைப்பு ஆனது இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் அறிமுகப் படுத்தப் படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இது பின்வரும் இரண்டு தொழில்நுட்பங்களின் கலப்பினைப் பயன்படுத்தும்:
ANPR (வாகன எண் தகடுகளின் தானியங்கு அங்கீகாரம்): வாகன எண் தகடுகளைப் அங்கீகரிப்பதற்கு ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்துகிறது.
FASTag: சுங்கச்சாவடி கட்டணங்களைக் கணக்கில் இருந்து தானாக எடுப்பதற்கு RFID குறியீட்டினைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பின் மூலம், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டியதில்லை.
இந்தக் கட்டமைப்பின் மூலம் சுங்கக் கட்டணங்கள் தானாகவே வசூலிக்கப்படும்.