இந்திய மானுடவியல் ஆய்வு மையம் (AnSI) மற்றும் இந்தியப் பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்கள் (TRI-கள்) ஆகியவை, முதன்முறையாக, முந்தைய ஆணையங்கள் ஒரு போதும் வகைப்படுத்தப்படாதவை என்று கருதிய சுமார் 268 சீர் மரபினர், பகுதியளவு நாடோடியாக உள்ள மற்றும் நாடோடியாக உள்ள பழங்குடியினர் பிரிவினை விரிவாக வகைப்படுத்தியுள்ளன.
இந்த மூன்று ஆண்டு கால ஆய்வு ஆனது நிதி ஆயோக் குழுவினால் தொடங்கப்பட்டது.
இந்தச் சமூகங்களில் சுமார் 179 சமூகங்களை 26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) (மத்திய) பட்டியல்களில் சேர்க்க பரிந்துரைத்துள்ளது.
இவற்றில் மிக குறைந்தது 85 சமூகங்கள் இந்தப் பட்டியல்களில் புதிய சேர்க்கைகளாக சேர்க்கப்படப் பரிந்துரைக்கப் படுகின்றன.
இந்தப் புதியச் சேர்க்கைகளில், 46 சமூகங்கள் OBC அந்தஸ்துக்கும், 29 சமூகங்கள் SC அந்தஸ்துக்கும், 10 சமூகங்கள் ST அந்தஸ்துக்கும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான (19) புதியச் சேர்க்கைகள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பட்டியலில் தலா எட்டு சமூகங்கள் இதில் சேர்க்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
இதில் ஆய்வு செய்யப்பட்ட சுமார் 63 சமூகங்கள் (20 சதவீதத்திற்கும் அதிகமானவை) இனி "கண்டறியப் பட முடியாதவை" என்றும் இந்த ஆய்வு முடிவு செய்தது.