அண்டார்டிக் பிராந்தியத்தில் பனியில் இருந்து அதிக ஆற்றல் துகள்கள் வெடிப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த துகள்கள் நமது பிரபஞ்சத்திற்கு இணையான மற்றோரு பிரபஞ்சத்திற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ANTIA (Antarctic Impulsive Transient Antenna) – அண்டார்டிக் உந்துவிசையாலான நிலையற்ற ஆண்டெனா அண்டார்டிக் பகுதியின் பனிக்கட்டிகளால் வெளியேற்றப் படும் ரேடியோ கதிர் துடிப்புகளைக் கண்டறியும்.
அஸ்காரியன் விளைவு காரணமாக பனியில் உள்ள நியூட்ரினோக்கள் ரேடியோ கதிர் துடிப்புகளை உருவாக்குகின்றன.
அஸ்காரியன் விளைவு என்பது ஒரு துகள் ஒரு அடர்த்தியான மின்சார ஊடகத்தில் ஒளியை விட வேகமாக பயணிக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
இது நாசாவின் நியூட்ரினோக்களுக்கான முதல் ஆய்வகமாகும்.
நியூட்ரினோக்கள் மட்டுமே தன் வீரியம் குறையாமல் பூமியை வந்து சேரும் ஒரே துகளாகும்.
நியுட்ரினோக்கள் நமக்கு எந்த வித ஆபத்தையும் தராத உயர்சக்தி துகள்களாகும். இது யாரும் அறியா வண்ணம் பெருமளவில் திடப் பொருட்களின் வழியே ஊடுருவிச் செல்கின்றது.
நியுட்ரினோக்கள் தொடர்ச்சியாக புவியைத் தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் 100 ட்ரில்லியன் நியுட்ரினோக்கள் ஒவ்வொரு நொடியும் நமது உடலின் வழியே ஊடுருவிச் செல்கின்றது.
அரிதாகவே அவை ஏதேனும் ஒரு நிறையின் மீது எதிர்ச் செயலாற்றுகின்றது.
ஆனால் ஒருவேளை அவை ஏதேனும் ஒரு அணுவைத் துளைத்து அதனுள் உட்சென்றால், நாம் உணரும் வகையில் இருக்கும் இரண்டாம்நிலை மின்னேற்றத் துகள்களின் பொழிவைத் தூவுகின்றது.
அது நம்மை அத்துகள்கள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்து வருகின்றன என்பதை ஆராயச் செய்திடும்.