2024 ஆம் ஆண்டு ஆசியப் பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு ஆனது பெருவில் உள்ள லிமா எனுமிடத்தில் நடைபெற்றது.
ஆசியப் பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
இது மிகவும் நிலையான மேம்பாட்டிற்கான தடையற்ற வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
சுங்கங்களை மேம்படுத்தி ஒழுங்குமுறைகளைச் சீரமைப்பதன் மூலம் சரக்குகள், சேவைகள், முதலீடுகள் மற்றும் மக்களின் பன்னாட்டு இயக்கத்தினை APEC அமைப்பு ஒழுங்குபடுத்துகிறது.
APEC ஆனது அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிற நாடுகள் உட்பட 21 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது என்பதோடு இது உலக மக்கள் தொகையில் சுமார் 40% பங்கினையும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 60% பங்கினையும் கொண்டுள்ளது.