வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது இந்த ஆண்டு தனது 37வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
2000-2001 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் இது 2021-2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு 2477 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது, உழவர் இணைப்பு தளம் என்ற இணைய தளத்தினையும் அமைத்துள்ளது.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது, 1985 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.