TNPSC Thervupettagam

APPSC - ஆட்சேர்ப்பில் நேர்காணல் நிலை நீக்கம்

October 23 , 2019 1735 days 593 0
  • ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏ.பி.பி.எஸ்.சி (ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்) ஆட்சேர்ப்பு பணியில் உள்ள “நேர்காணல் நிலையை” நீக்க முடிவு செய்துள்ளார்.
  • இதன் படி ஜனவரி 2020 முதல் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் எந்தவொரு நேர்காணலுக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்வுகளில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள்.
  • பணியமர்த்தல் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இந்த முடிவு பாராட்டப் படுகிறது.
  • ஒவ்வொரு ஜனவரி மாதமும் ‘ஆட்சேர்ப்பு மாதமாக’ கடைபிடிக்கப்படும் என்று மாநில அரசு முன்பு அறிவித்திருந்தது.
  • அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப மாதம் முழுவதும் ஆய்வு நடத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்