TNPSC Thervupettagam

APTA உறுப்பினர்களுக்கானக் கட்டணச் சலுகை

July 5 , 2018 2336 days 711 0
  • ஜூலை 1, 2018லிருந்து ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த உறுப்பினர்களுக்கு (APTA - Asia Pacific Trade Agreement) 3,142 விளைபொருட்களுக்கு கட்டணச் சலுகையை வழங்குவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆசிய பசிபிக் பகுதிகளின் வளர்ந்து வரும் உறுப்பினர் நாடுகளுக்கிடையே கட்டணச் சலுகை பரிமாற்றத்தின் மூலம் வர்த்தகத்தை விரிவடையச் செய்வதற்காக ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக குழுக்களின் (UN ESCAP - United Nations Economic & Social Commission for Asia & the pacific) முயற்சியே APTA ஆகும்.
  • இது ஒரு விருப்ப வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் கீழ் எந்தெந்த பொருட்கள் மற்றும் எந்த அளவிற்கான கட்டணச் சலுகை ஆகியன யாவும் வர்த்தக பேச்சுவார்த்தை சுற்றின் போது விரிவுப்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்