ஜூலை 1, 2018லிருந்து ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த உறுப்பினர்களுக்கு (APTA - Asia Pacific Trade Agreement) 3,142 விளைபொருட்களுக்கு கட்டணச் சலுகையை வழங்குவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய பசிபிக் பகுதிகளின் வளர்ந்து வரும் உறுப்பினர் நாடுகளுக்கிடையே கட்டணச் சலுகை பரிமாற்றத்தின் மூலம் வர்த்தகத்தை விரிவடையச் செய்வதற்காக ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக குழுக்களின் (UN ESCAP - United Nations Economic & Social Commission for Asia & the pacific) முயற்சியே APTA ஆகும்.
இது ஒரு விருப்ப வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் கீழ் எந்தெந்த பொருட்கள் மற்றும் எந்த அளவிற்கான கட்டணச் சலுகை ஆகியன யாவும் வர்த்தக பேச்சுவார்த்தை சுற்றின் போது விரிவுப்படுத்தப்படுகின்றன.