TNPSC Thervupettagam
September 3 , 2019 1792 days 665 0
  • அக்வா அக்வாரியா இந்தியா 2019 (நீர்வாழ் உயிரின கண்காட்சி ) ஹைதராபாத்தில் துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
  • இதை கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும்.
  • இதன் கருத்துரு : “இந்தியாவின் உள்நாட்டிற்குள் நீலப் புரட்சியை எடுத்துச் செல்லுதல்” என்பதாகும்.
  • மேலும் உள்நாட்டு “முத்து”  வகையான ஆர்ட்டெமியாவையும் துணைக் குடியரசுத் தலைவர் அறிமுகப்படுத்தினார்
  • இதை இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ்  மீன்வளர்ப்பிற்கான ராஜீவ் காந்தி  மையம்   உருவாக்கியுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது புலி இறால் வளர்ப்பு மற்றும் அதன் ஏற்றுமதி ஆகியன ஊக்குவிக்கப்பட்டது.
  • இந்தியாவின் கடல் உணவுத் தொழில் துறையானது  உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தித் துறையாகும்.
  • இந்தியாவானது அமெரிக்காவிற்கு அதிக அளவில் இறால்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்திலும் ஐரோப்பாவிற்கு இறால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும் ஜப்பானுக்கு இறால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • இந்தியாவின் மொத்த கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 52 சதவீத அளவிற்கு மீன் வளர்ப்பு பங்களிக்கிறது.

 

ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையம் (ஆர்.ஜி.சி.ஏ)

  • ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையமானது கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு  ஆகும்.
  • கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
  • இது நீடித்த கலாச்சார தொழில்நுட்பங்கள் மூலம் இந்திய கடல்சார் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்