TNPSC Thervupettagam
November 7 , 2024 22 days 105 0
  • அமலாக்க இயக்குநரகத்தினை (ED) கொண்டு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தியா, சொத்து மீட்பு தொடர்பான முகமைகளுக்கிடையிலான வலையமைப்பு-ஆசிய பசிபிக் (ARIN-AP) அமைப்பின் வழிக்காட்டுதல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு குற்ற வழக்குகளைக் கையாள்வதற்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு முக்கியப் பல்-முகமை வலையமைப்பு மற்றும் உலகளாவிய CARIN வலையமைப்பின் உறுப்பினராக உள்ள ஒரு அமைப்பாகும்.
  • இந்தியா இந்த வலையமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 2026 ஆம் ஆண்டில் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தினை (AGM) நடத்தும்.
  • ARIN-AP ஆனது சொத்துக் கண்டுபிடிப்பு, முடக்கம் மற்றும் பறிமுதல் ஆகியவற்றில் எல்லை கடந்த ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக நிறுவப்பட்டது.
  • இது 28 உறுப்பினர் நாடுகள் மற்றும் ஒன்பது பார்வையாளர் நாடுகள் ஆகியவற்றினை உள்ளடக்கியதோடு CARIN வலையமைப்பின் ஒரு பகுதியாக ஒரு முறைசாரா மற்றும் வலுவான வலையமைப்பாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்