அமலாக்க இயக்குநரகத்தினை (ED) கொண்டு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தியா, சொத்து மீட்பு தொடர்பான முகமைகளுக்கிடையிலான வலையமைப்பு-ஆசிய பசிபிக் (ARIN-AP) அமைப்பின் வழிக்காட்டுதல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு குற்ற வழக்குகளைக் கையாள்வதற்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு முக்கியப் பல்-முகமை வலையமைப்பு மற்றும் உலகளாவிய CARIN வலையமைப்பின் உறுப்பினராக உள்ள ஒரு அமைப்பாகும்.
இந்தியா இந்த வலையமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 2026 ஆம் ஆண்டில் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தினை (AGM) நடத்தும்.
ARIN-AP ஆனது சொத்துக் கண்டுபிடிப்பு, முடக்கம் மற்றும் பறிமுதல் ஆகியவற்றில் எல்லை கடந்த ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக நிறுவப்பட்டது.
இது 28 உறுப்பினர் நாடுகள் மற்றும் ஒன்பது பார்வையாளர் நாடுகள் ஆகியவற்றினை உள்ளடக்கியதோடு CARIN வலையமைப்பின் ஒரு பகுதியாக ஒரு முறைசாரா மற்றும் வலுவான வலையமைப்பாகச் செயல்படுகிறது.