பெங்களுருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் "ARYABHAT-1" என்ற தொடர்முறை சில்லு தொகுதிகளின் ( சிறிய மின்னணு தொடர்முறை சுற்றுகள்) முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
ARYABHAT-1 என்பது செயற்கை நுண்ணறிவுச் செயல்முறைகளுக்கான தொடர்முறை மறு அமைவாக்கத் தொழில்நுட்பம் மற்றும் பிறழ்வு வகை-தகவமைவு வன்பொருள் என்பதைக் குறிக்கும்.
இந்த சில்லுத் தொகுதிகள் வேகமாக செயல்படும்.
வெவ்வேறு மின்னணு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் எண்ணிமச் செயலிகளுடன் ஒப்பிடும் போது இது குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலானச் செயலிகளுக்கு இத்தகையச் சில்லுத் தொகுதிகள் பயனுள்ளதாக இருக்கும்.